சிவகங்கை சிவன் கோவில் அருகே JP ஸ்பெசாலிட்டி இதயம் மற்றும் கண் மருத்துவ கிளினிக்கை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் திறந்தவைத்தார் இதனை அடுத்து சிவகங்கை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிஆர். செந்தில் நாதன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன், சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், மைக்கேல் கல்லூரியின் சேர்மன் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி சிகிச்சை அளிக்கப்படும் வார்டு பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு மருத்துவ மனை சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் காளையார்கோவில் விஸ்வநாதன் , சிவகங்கை அதிமுக நகர செயலாளர் ராஜா மட்டும் சிவகங்கை நகர் மன்ற உறுப்பினர்கள் சிவகங்கை தொழிலதிபர்கள் சமூக ஆர்வலர் என பலரும் கலந்து கொண்டு மருத்துவர்கள் ஜெய பாண்டியன் சுகப்பிரியா , வாழ்த்திச்சென்றனர் .

