ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரத தலைவர் மோகன் பாகவத், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் சக்ராவிஷன் தொண்டு நிறுவனத்தின் சார்பாக ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகப் பெருஞ்சுவரை இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் சிறப்புரை ஆற்றும் போது,” நாம் புண்ணிய பூமி பாரதத்தில் பிறந்தவர்கள். பாரத நாடும்,அதன் கலாச்சாரமும் மிகப் பழமையானது. பண்டைய காலம் தொட்டு, இக்காலம் வரை பாரத கலாச்சாரம் உயர்ந்த நிலையில் உள்ளது. சீன மற்றும் கிரேக்க நாகரிகங்கள் இன்று புழக்கத்தில் இல்லை. பண்டைய நாகரிகங்களில் பாரதிய நாகரிகம் மட்டுமே இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது. நாம் வரலாற்று காலம் தொட்டு இன்றும் எஞ்சி இருக்கிறோம். நமது நாகரிகம் என்றும் அழியாத ஒன்று என்பதை அறுதியிட்டு கூறலாம் எனவும், நம் பாரத பண்பாடு, காலம்- காலமாக தன்னை புதுப்பித்துக் கொண்டுள்ளது எனவும், எண்ணற்ற தியாக சீலர்களின் தியாகத்தால், பாரத பண்பாடு உலகில் தலை நிமிர்ந்து உள்ளது- எனவும், எத்தனையோ தாக்குதல்களை பாரதம் சந்தித்துள்ளதாகவும், பாரதத்தை அழிக்க எத்தனையோ முயற்சிகள் நடைபெற்ற பின்பும் பாரதம் ஒவ்வொரு முறையும் வீறு கொண்டு புதிய உத்வேகத்துடன் எழுந்து நிற்பதாகவும் தெரிவித்தார்.


மேலும் நமது பண்பாட்டில் நாம் மரங்கள், விலங்குகள், நதிகள், மலைகள் ஆகிய அனைத்தையுமே வழிபடும் உயரிய பண்பாட்டை கொண்டுள்ளோம் எனவும்”- பெருமிதம் தெரிவித்தார். நிகழ்ச்சியில், விவேகானந்தா கேந்திராவின் அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணன் சக்ரா விஷன் தொண்டு நிறுவன தலைவர் சக்ரா ராஜசேகர், அதன் துணைத் தலைவர் கோவர்தனன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன்,எம்.ஆர். காந்தி,புதுவை சபாநாயகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி மற்றும் பெருந்திரளான சுயம்சேவா சங் உறுப்பினர், குமரி பாஜாகவின் பல்வேறு பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மாலை சரியாக 5_மணிக்கு தொடங்கி 6-மணிக்கு நிறைவு பெற்றது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மட்டுமே உரையாற்றினார். விழாவில் அவருக்கு நினைவு பரிசு கொடுக்க பட்டது.

