• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோச்சடையில் 5 கே கார் கேர் நிறுவன திறப்புவிழா

Byகுமார்

Oct 10, 2024

மதுரையில் 5 கே கார் கேர் நிறுவனத்தின் மதுரையில் 5 கே கார் கேர் நிறுவனத்தின் 209 கிளை கோச்சடையில் திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது.கிளை கோச்சடையில் திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது.
தென்னிந்திய அளவில், 200 க்கும் மேற்பட்டகிளைகளுடன் கார்கள் சர்வீஸ் மற்றும் அது தொடர்பான அனைத்துசேவைகளையும் வழங்கி வரும் 5 கே கார் கேர் நிறுவனம்
வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்று இயங்கி வருகிறது. நடுத்தர வகை கார்கள் முதல் உயர் ரக சொகுசு கார்கள் வரை அனைத்து வகையான கார்களை பராமரிப்பதில் முன்னனி நிறுவனமான 5 கே கார் கேர் 35 இலட்சம் வாடிக்கையாளர்களை கொண்டு 2500 க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் தனது 209 வது கிளையை கோச்சடை
அருகில் உள்ள டோக் நகர் பகுதியில் 5 கே கார் கேர் மையத்தின் புதிய கிளை துவங்கப்பட்டது. கிளையின் உரிமையாளர் அபூபக்கர். வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக5கே கார் கேர் நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக் குமார் சின்ராஜ் பேராசிரியர் ஞானசம்பந்தன் கார்த்திக் சேதுராமன் ஸ்ரீதேவி கார்ஸ். பிரிமியம் கஸ்டமர் ஜெகதீசன் மற்றும் பிரான்சிஸ் ஆகியோர் கலந்து கண்டு திறந்து வைத்தனர்.

புதிய கிளையின் சேவைகள் குறித்து கிளை உரமையாளர் அபூபக்கர் மற்றும் 5 கே கார் கேர் நிறுவனத்தின் நிறுவனர் தலைமை செயல் அதிகாரி கார்த்திக் குமார் சின்னராஜ் ஆகியோர் பேசினர்,
கார்கள் பராமரிப்பில் கார் டீடெயிலிங் எனும் பணியை எங்களது நிறுவனம் சிறப்பாக செய்து வருவதாகவும், ஒவ்வொரு கிளை திறப்பின் போதும் வாடிக்கையாளர்கள் பயன் பெறும் விதமாக புதிய புதிய சலுகைகளை அறிவித்து வருவதாக கூறினார். அதனைத் தொடர்ந்து அக்டோபர் இரண்டாம் தேதி மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, லண்டனில் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் மகாத்மா காந்தி எக்ஸலெண்ட் அவார்டு விழாவில் 5 கே கார் கேர் வேர்ல்ட் லீடிங் கார் கேர் பிராண்ட் அவார்ட் கொடுத்து அங்கீகாரத்தை வழங்கி கவுரவப்படுத்தினார். இதனை கொண்டாடும் விதமாக மதுரை கோச்சடையில் அமைந்துள்ள இன் நிறுவனத்தில் 209 கிளையில் ஊழியர்கள்மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு கொண்டாடினர்.