• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிம்மக்குரல் கலைக்குழுவின் ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா

BySeenu

Sep 30, 2024

கோவையில் நடைபெற்ற சிம்மக்குரல் கலைக்குழுவின் ஒயிலாட்டம் அரங்கேற்றத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என நூற்றுக்கணக்கானோர் வண்ண ஆடைகளுடன் பம்பை இசைக்கு ஏற்ப உற்சாக நடனம் ஆடி அசத்தினர்.

கோவையை சேர்ந்த சிம்மக்குரல் கலைக்குழு சார்பில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம்,வள்ளிகும்மியாட்டம்,காவடியாட்டம் ஆகிய கலைகள் இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.கிராமப்புறங்களில் மட்டுமே இந்த கலைகளை பலர் கற்று வந்த நிலையில்,தற்போது இளம் தலைமுறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் இது போன்ற தமிழக பாரம்பரிய கலைகளை ஆர்வமுடன் கற்று வருகின்றனர்.

இந்நிலையில் இவ்வாறு பயிற்சி பெற்ற ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா விளாங்குறிச்சி பகுதியில் கோலாகலமாக நடைபெற்றது.

சிம்மக்குரல் கலைக்குழுவின் தலைவர் சதீஷ்குமார் ஆசிரியர் நவீன் குமார்,இணை ஆசிரியர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் திறந்த வெளி மைதானத்தில் காளைகளுடன், பாரம்பரிய கலைகள் குறித்து இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற ஒயிலாட்டத்தில் விளாங்குறிச்சி, ராமகிருஷ்ணாபுரம் ,கள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 180 கலைஞர்கள் பங்கு பெற்றிருந்தனர்.

இதில் இருகூர் பம்பை இசை முழங்க கிராமிய பாடல்களை பாட,அதற்கு ஏற்றாற் போன்று சிறுமியர்கள் மற்றும் இளம்பெண்கள் வண்ண உடைகளுடன் காலில் சலங்கை கட்டி ஒருசேர நடன அசைவுகளை வெளிப்படுத்தி கூடியிருந்தவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.