சிவகங்கை அருகே உள்ள இலுப்பகுடியில் அமைந்துள்ள இந்தோ தீபத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் மத்திய அரசின் தூய்மையே சேவை திட்ட தொடக்க விழா இன்று காலை சுமார் 11 மணியளவில் நடைபெற்றது.
தூய்மை பணியாளர்கள் மேற்கொள்ளும் தூய்மை பணி அவர்களின் நலன் கருத்தில் கொண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஸ்வஜ் பாரத் திவாஸ் எனப்படும் தூய்மை தினமான அக்டோபா் 2-ஆம் தேதி வரை தூய்மையே சேவை பிரசாரத்தை மேற்கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.இத்திட்ட தொடக்க விழாவில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம் துறை ஆனந்த் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் எல்லை பாதுகாப்பு பயிற்சி வீரர்கள் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


