அரியலூர் மாவட்டத்தில் ரூ.5.04 கோடி மதிப்பீட்டில் 04 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளின் தொடக்க விழா . அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
அரியலூர் நகராட்சி பகுதியில் முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி தலைமை தாங்கினார்.

அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர், அரியலூர் நகராட்சி பகுதியில் ரூ.360 இலட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புத் துறை ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடங்கள் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் தலைமையில் செந்துறை ஊராட்சியில் ரூ.11.50 இலட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலைய நுழைவுவாயில் வளைவு அமைத்தல், ரூ.97.80 இலட்சம் மதிப்பீட்டில் கிளை நூலகம் கட்டுதல் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் புதிய போக்குவரத்து கழக பணிமனை அமைத்தல் என மொத்தம் 03 வளர்ச்சித் திட்டப் பணிகளையும் அமைச்சர் தொடங்கி வைத்து,வளர்ச்சித் திட்டப் பணிகளை தரமான முறையில் விரைவாக நிறைவேற்றி பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் தசரதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் ஆ.ரா.சிவராமன், திருச்சி மண்டல பொது மேலாளர் டி.சதீஷ்குமார், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் இராமலிங்கம், அரியலூர் நகரச் செய லாளர் இரா.முருகேசன், ஒன்றிய திமுக செயலாளர்கள் மா அன்பழகன்,கோ.அறிவழகன், தெய்வ இளைய ராஜன், பூ.செல்வராஜ், வி.ஏழில் மாறன், பொன்.செல்வம், பொதுக்குழு உறுப்பினர் கள்.இரா.பாலு,சுமதி, நகர்மன்றத் தலைவர் சாந்தி, துணைத் தலைவர் தங்க கலியமூர்த்தி, பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் வெங்க டேசன், மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன், கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநர் முரளிதரன், உதவி இயக்குநர் முருகேசன், நகர்மன்ற உறுப்பினர்கள் அன்புராஜேஷ்,மு.க.புகழேந்தி, தொ.மு.ச. தொழிற்சங்க பிரதிநிதி கள் பி.வி.அன்பழகன், கனகராஜ் மற்றும் இதர அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.










