புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா தாஜ் ஹாலில் நடைபெற்றது. மாவட்ட முதல் துணை ஆளுநர் விஜயலக்ஷ்மி சண்முகவேல் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளாக தலைவராக K. செல்லையா, செயலாளராக A. பாண்டிவேல், பொருளாளராக C. செல்வகுமார் ஆகியோரை பணியில் அமர்த்தினார். மேலும் கண் பார்வையற்றோர் பெற்றோரின் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் தையல் மிஷின், மருத்துவ உதவி ஆகியவை சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது. மேலும் Dr. ராமமூர்த்தி, முஹமத் அபூபக்கர், இளங்கோவன், கைலாசம், சத்தியமூர்த்தி, Er. செந்தில்குமார், ராமகிருஷ்ணன், சந்திரசேகர், சசிகுமார், சரவணன், ராஜராஜன், ரமேஷ், குமரன் ஆகியோர் நிர்வாகிகளாக பொறுப்பேற்று கொண்டனர்.

இரத்த தானம் செய்த 4 நபர்களுக்கு சங்கத்தின் சார்பில் பொன்னாடையும், கேடயமும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட முதல் துணை ஆளுநர் லயன்ஸ் இயக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் உலகம் முழுவதும் அதன் சேவை திட்டங்கள் குறித்து எடுத்துறைத்தார். மண்டல தலைவர் சத்தியமூர்த்தி புதிய 10 உறுப்பினர்களுக்கு பதவி ஏற்பு செய்து வைத்தார். வட்டார தலைவர் கிராண்ட் பிரவீன் குமார் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் சங்கத்தின் சாசன தலைவரும் நிர்வாக அலுவலருமான அரவிந்த் அவர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தார். செல்வகுமார் நன்றியுரை வழங்கினார்.









