• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

வசந்தவாசல் கவி மன்றத்தின் தொடக்க விழா..,

BySeenu

Aug 18, 2025

கோவை வசந்தவாசல் கவி மன்றத்தின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழா வடகோவை மாருதி ஞானசபாவில் நடைபெற்றது இந்த விழாவில் கோவை சேர்ந்த தயாரிப்பாளரும் , நடிகருமான தயா பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தயா பன்னீர்செல்வம் அவர்கள் வாழ்த்துரையில் பேசும்போது, எதிர்பாராமல் கிடைத்தது ,இந்த நடிகர் என்ற புகழ். “அக்யூஸ்ட்” படத்தில் தனக்கு கிடைத்து இருப்பதாகவும், தயாரிப்பாளர்களில் ஒருவரான தயா பன்னீர்செல்வம் அவர் நடிகராக அவதாரம் எடுத்தது குறித்து கூறும்போது, கொங்கு மண்டலம் கோவை மாவட்டத்தில் பிறந்து , தொழிலதிபராக வளர்ந்து 2016 சினிமா உலகில் தயாரிப்பு பணியில் ஈடுபட ஆரம்பித்ததாகவும், 2022ல் தன்னுடைய ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் என்ற நிறுவனத்தின் மூலம் ரியா தி ஹண்ட் ஹவுஸ் திரைப்படத்தில் இயக்குனர், நடிகர் பாண்டியராஜன் அவர்களை வைத்து, ஒரு பேய் படத்தை முதல் முதலாக நேரடியாக திரையில் தயாரித்து, திரையுலகில் கால் பதித்தாக தயா பன்னீர்செல்வம் கூறினார் .

மேலும் அந்த படத்திலும் பாண்டியராஜன் முக்கிய கதாபாத்திரம் என்று நடித்ததாகவும், அந்த படத்தில் நல்ல வரவேற்பு பெற்றபோதும் , தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு இரண்டு படங்களை தயாரிக்க திட்டமிட்டு பெயர் சூட்டப்படாத திரைப்படம் ஒன்றை நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரை வைத்து, தேனாண்டாள் நிறுவனத்துடன் இணைந்து முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளார்.

அதன் பிறகு நடிகர் உதயா, அஜ்மல், யோகிபாபு கூட்டணியில் இயக்குனர் பிரபு சீனிவாஸ் இயக்கத்தில் “அக்யூஸ்ட்” எனும் மிகப்பெரிய படத்தை மூன்று பேர் தயாரிப்பு கூட்டணியில் மிக விரைவாக படப்பிடிப்பை முடித்தது மட்டும் அல்லாமல் அந்தப் படத்தை வெளியிட்டு, தற்சமயம் மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

“அக்யூஸ்ட் ” திரைப்படம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், மிக பிரமாண்டமாக கதை, இசை, ஆக்சன், காதல், காமெடி என இந்த ஆண்டின் மிகச் சிறந்த படமாக இந்த படத்தை மக்கள் அங்கீகரித்து உள்ளதாகவும் கூறினார்.
இந்த படத்தில் உதயா, அஜ்மல், யோகிபாபு ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் கதையின் நாயகியை திருமணம் செய்து கொண்டு அதிரடி காட்டி நக்கல், நையாண்டியோடு நடிப்பில் அசத்தி சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை தயா பன்னீர்செல்வம் இந்த படத்தில் நாகராஜாக பெற்றதாக கூறினார்.

இதில் தயா பன்னீர்செல்வம், நாகராஜாக நடித்து படத்தின் திருப்புமுனை கதாபாத்திரமாக வந்து கதாநாயகி மலரை வம்பு இழுத்து, கையையே இழந்து
அதன் பின் கதாநாயகி மலரை , திருமணம் செய்து கொண்டு
ஒற்றைக் கையுடன் மிக நேர்த்தியாக நடித்து முள்ளும் மலரும் ரஜினிகாந்தை ஞாபகப்படுத்தும் அளவிற்கு நடித்ததாக ரசிகர்கள் கூறும்போது மெய் சிலிர்ப்பதாக தெரிவித்தார் .

இப்படி நடிப்பு அவதாரம் அவரை மக்களின் நடிகராக பெயர் பெற காரணமாக அமைந்து உள்ளதாகவும், கோவை மண்ணின் மைந்தர்களான தயாரிப்பாளர்கள் கோவை செழியன், கோவை தம்பி, மாதம்பட்டி சிவகுமார் போன்றோர் வரிசையில் தயா பன்னீர்செல்வமாகிய நானும் இடம் பெற்றதை பெரும் பேராக கருதுவதாகவும் , மேலும் இவர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் , செயற்குழு உறுப்பினராக இடம் பெற்றுள்ளதையும் மிகப்பெரிய கெளரவமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது அக்யூஸ்ட் படம் மூலம் கோவையில் இருந்து புகழ் பெற்ற நடிகர்கள் வரிசையில் தயா பன்னீர்செல்வம் எனும் நானும் இணைந்துள்ளதை சொல்லி மகிழ்ந்தார் . இந்த நடிகர் அவதாரம் தனக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தையும், இன்ப அதிர்ச்சியையும் தந்திருப்பதாக நடிகர் மற்றும் தயாரிப்பாளர் தயா பன்னீர்செல்வம் தெரிவித்தார்.