இந்தியாவின் சுதந்திரம், மொழிவழி மாநிலங்கள் என்ற பிரிவுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது குமரி மாவட்டம். கன்னி தெய்வம் கோயில் கொண்டதால், கன்னியாகுமரி என பெயர் பெற்றது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி மாதம் திருவிழா நடைபெறும். இவ்வாண்டு வைகாசி திருவிழா இன்று(மே_14) காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது என்பதை கடந்து கொடியேற்றத்திற்கு பயன் படுத்தும் திருகயறு, திருவிதாங்கூர் காலம் முதலே. கன்னியாகுமரியில் உள் வாவத்துறை என்ற மீனவ கிராமத்தை சேர்ந்த “கைலியார்”என்ற மீனவர் தான் குமரி கோயிலின் கொடியேற்றத்திற்கு பயன் படுத்தும் கயிற்றை கொடுப்பவர் என்பது சகாப்த்தங்களை கடந்து இன்றும் தொடர்கிறது.

வைகாசி திருவிழாவின் கொடியேற்றத்திற்கு முந்திய நாள் முன் இரவு நேரத்தில் மேளதாளம் முழங்க தீ வெட்டி வெளிச்சத்தில்,குமரியம்மன் பகவதி கோவில் சார்பில் கோவில் பணியாளர்கள். கைலியார் குடும்பத்தின் இன்றைய வாரிசை அவரது வீட்டிற்கு சென்று பூ மாலை கொடுத்து வரவேற்று. கைலியார் குடும்பத்தின் இன்றைய ஆண் வாரிசு கொடிகயிற்றை தோளில் சுமந்து பகவதியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்வதும். கோயில் தலை வாதலில் கோயில் மேலாளர் மீனவரிடம் இருந்து கொடி கயிற்றை பெற்றுக்கொண்ட சடங்கு நேற்று (மே_13)இரவு நடைபெற்றது.

இன்று அதிகாலை 7.30, மணிக்கு மீனவர் கொடுத்த கயிற்றில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. குமரி மாவட்ட அறநிலையத்துறை தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஏராளமான பக்தர்கள் திருக்கொடியேற்றத்தை தரிசித்தனர்.

