• Thu. Sep 25th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கிறிஸ்துமஸ் பாடல் ஆராதனை நிகழ்ச்சியில், 60 கலைஞர்கள் இணைந்து பாடியது மெய்சிலிர்க்க வைத்தது…

BySeenu

Dec 13, 2023

இயேசு கிறிஸ்து பிறந்து தினமான டிசம்பர் 25-ந் தேதி ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இயேசுவின் பிறப்பை முன்னறிவிக்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சி எஸ் ஐ சகல ஆன்மாக்கள் ஆலயத்தில் கிறிஸ்தவ பாடல் ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. (JOY HAS DAWNED) எனும் தலைப்பில்,நடைபெற்ற இந்நகழ்ச்சியை,ஆலயத்தின் பாடகர் குழுவினர் ஒருங்கிணைத்தனர். வயலின், வயோலா,கிடார்,கீ போர்டு, செலோ, டபுள் பாஸ் மற்றும் டிரம்ஸ் என பதினைந்து இசைக்கருவிகளுடன் 60 பாடகர்கள் இயேசு கிறிஸ்துவின் புகழ் பாடல்களை உருக்கமுடன் பாடிய ஆராதனை பாடல்களை , திரளான கிறிஸ்தவர்கள் கண்டு மெய் சிலிர்த்தனர். சி.எஸ்.ஐ. ஆல் சோல்ஸ் ஆலய இசைக்குழு சார்பாக நடைபெற்ற பாடல் ஆராதனை நிகழ்ச்சியை கிறிஸ்டோபர் கருணாகரன் ஒருங்கிணைத்தார். அகஸ்டின் நேசராஜ் மற்றும் டொனால்ட் எப்ராயிம் கீபோர்டு இசையை வாசித்தனர்.இந்த பாடல் ஆராதனை நிகழ்ச்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.