• Sat. May 11th, 2024

தமிழகத்தில் முதுநிலை அல்லாத கோயில்களில் பணிபுரியும் பணியாளர்கள் அவலநிலை…

ByKalamegam Viswanathan

Sep 21, 2023

தமிழகத்தில் உள்ள திருக்கோவில்கள் முதுநிலை மற்றும் முதுநிலை அல்லாத திருக்கோயில் எனப் பிரிக்கப்படுகிறது. முதுநிலை கோயில்கள் என்பது, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவேற்காடு கருமாரியம்மன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கள்ளழகர் திருக்கோவில், திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில், உள்ளிட்ட கோயில்கள் என்றும், முதுநிலை அல்லாத கோயில்களும் உள்ளன.
இக்கோயில் பணிபுரியும் பணியாளர்கள் முதுநிலை கோயில் பணிபுரியும் பணியாளருக்கு ஒரு சம்பளமும், முதுநிலை அல்லாத கோவில் பணிபுரியும் பணியாளர் ஒரு வித சம்பளமும் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சில கோவில்களில் பணியாளருக்கு மாத ரூபாய் 500 முதல் 1500 வரை பல ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
அத்துடன் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் 20- ஆண்டுகளுக்கு மேற்பட்ட பணி நிரந்தரம் செய்யப்படாமல், பணிபுரிந்து வருகின்றனர்.
சில கோவிலில் பணியாளர்கள் சம்பளம் வழங்கப்படும் போது சம்பள பதிவேட்டில் கையெழுத்து இடப்படுவதும், இன்னும் சில கோவில்களில் பணியாளருக்கு வவுச்சலில் கையெழுத்து வாங்கி பல ஆண்டுகளாக சம்பளம் வழங்கும் நிலையும் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் நிர்வாக அதிகாரி கட்டுப்பாட்டு உள்ள கோயில்களில் தொடர்ந்து, கோவில் அர்ச்சகர் ,காவலர், தூய்மைப் பணியாளர், பரிசாதகர் ஆகியோருக்கு குறைவான சம்பளமும், அதே கோவில் பணிபுரியும் எழுத்தர், கணக்கர் ஆகியோருக்கு ஒரு சம்பளமும் அறநிலையத் துறை அதிகாரிகளால் நிர்ணயிக்க படுகிறது.
இன்னும் சில கோயில்களில் பணியாளர்களுக்கு சர்வீஸ் புக் தொடக்கப்படவில்லையாம்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கோயில்களில் தக்கார் மற்றும் அறங்காவலர்கள் தீர்மானத்தால், பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த சில ஆண்டுகளாக தான் பணியாளர்களுக்கு ஆணையாளர், பணி நியமனை ஆணை வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் சம்பள நிர்ணயமும் செய்யப்பட்டுள்ளது.
தக்கரார் மற்றும் பரம்பரை அறங்காவலர், அறங்காவலர்களால், நியமிக்கப்பட்ட பணியாளருக்கு குறைவான சம்பளமும் வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, அறநிலையத் துறை துணை மற்றும் இணை ஆணையாளர்கள் கோயிலில் ஆய்வு செய்து மிகக் குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்க ஆவண செய்ய கோவில் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறநிலையத் துறை அமைச்சரும், அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோவில் பணிபுரியும் பணியாளர்களின் கோரிக்கையாகும். ஆகவே, மண்டல இணை ஆணையர், குறைவான சம்பளம் பெற்று பணி நிரந்தரம் செய்ய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *