தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் ரேஷன் அரிசிகளை ஆட்டோவில் சாக்கு பைகளில் ஏற்றி கடத்தும் அவலம் நீடித்து வருகிறது.
பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் வீடுகளில் கிலோ 12 ரூபாய்க்கு ரேஷன் அரிசிகளை வாங்குகின்றனர்.
பின்னர் இந்த ரேஷன் அரிசிகளை சாக்கு பைகளில் கட்டி ஆட்டோவில் ஏற்றி தனியார் ஹோட்டல்கள் மற்றும் கேரளாவிற்கு கடத்த பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் ரேஷன் அரிசிகளை மாவாக அரைத்து மாடுகளுக்கு தீவனமாகவும் விற்பனை செய்யும் சம்பவம் நடைபெற்று வருகிறது.
எனவே தேனி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.