• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில், பிஜேபி நிர்வாகி மீது பணமோசடி புகார்!

Byகுமார்

Jan 26, 2022

மதுரை பெத்தானியபுரத்தைச் சேர்ந்த தனபால், ரேணுகாதேவி உள்ளிட்ட பல பேரிடம் மத்திய அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாகவும், மேலும் திருச்சி, திண்டுக்கல் மற்றும் பல மாவட்டங்களிலும் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுப்ட்டு வந்ததாகவும், பிஜேபி மகளிர் அணி மாவட்ட செயலாளர் செல்வி மீது புகார் எழுந்துள்ளது!

மோசடியில் ஈடுபட்டு வரும் பிஜேபி மகளிர் அணி மாவட்டச் செயலார் செல்வி மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பணத்தை மீட்டு தரக்கோரியும், மதுரை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரிடமும், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகரிடமும் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது!