• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

“தலைவர் 169” -இல், எஸ்.கேவுக்கு இந்த ரோலா?

சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அப்டேட் வெளியானது.

இந்நிலையில் தலைவர் 169 திரைப்படத்தில் ரஜினியின் மகனாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ரஜினியுடன் சின்ன ரோலில் நடிக்க ஆசைப்பட்ட சிவகார்த்திகேயனுக்கு அவரது மகனாக நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் நெல்சன். இதனால், சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியில் உச்சத்தில் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இத்திரைப்படத்தில் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், இப்படத்தில் நடிக்க வைகை புயல் வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள நிலையில் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது