• Fri. Apr 26th, 2024

குமரியில், ரூ17.76 கோடிக்கு குடித்து தீர்த்த குடிமகன்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.17 கோடியே 76 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில், மொத்தம் 113 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன! இதன் மூலம் நாள் ஒன்றுக்கு, ரூ.2 கோடி முதல் 2.50 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகின்றன! மேலும், பண்டிகை காலங்களில் அதிகளவில் மதுபானங்கள் விற்பனை நடைபெறுவதும் வழக்கம்..

இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறைகள் காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் மொத்தம் ரூ.17 கோடியே 76 லட்சத்து 44 ஆயிரத்து 180க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இதில் கடந்த 24ஆம் தேதி ரூ. 5 கோடியே 63 லட்சத்து 80 ஆயிரத்து 780க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ரூ. 4 கோடியே 81 லட்சத்து 63 ஆயிரத்து 430க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. 26ஆம் தேதி ரூ 4 கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 80க்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.

டிச.27ஆம் தேதி, ரூ.3 கோடியே 29 லட்சத்து 49 ஆயிரத்து 890க்கு மதுபானங்களை புத்தாண்டு வரை விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே வருகிற 31ம் தேதி மதுபான பார்களுக்கு டெண்டர் நடக்க உள்ளது. இந்த பார்களை ஏலமிடுக்க கடுயைமான போட்டியும் நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *