• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

குமரியில் மீனவ குடும்பங்கள் அறவழியில் போராட்டம்..!

கன்னியாகுமரியில் மீனவ குடும்பங்கள் அறவழியில் போராட்டம் நடத்தினர். பெரியநாயகி  தெரு தூண்டில் பாலத்தை இருப்பதை விட 300 மீட்டர் நீட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல், நீரோடி வரை உள்ள 47_மீனவ கிராமங்களில் படகின் பாதுகாப்புக்காக கடலில் பல இடங்களில் தூண்டில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மீனவர்கள் குடியிருப்பு பகுதியான பெரிய நாயகி தெருவை அடுத்து போடப்பட்டுள்ள தூண்டில் பாலத்தை இப்போது இருக்கும் நீளத்தை விட 300 மீட்டர் நீட்டித்து தரவேண்டும் என வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 29 ம்தேதி தூண்டில் பாலத்திலே இருந்து அரசுக்கு ஒரு கோரிக்கை போராட்டத்தை, கன்னியாகுமரி மீனவர்கள் நடத்தினர் இது வரையில் மீன்துறையோ, தமிழக அரசோ எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில நாட்களுக்கு முன் இரண்டு நாட்டு படகுகள் இந்த தூண்டில் பாலத்தில் மோதியதில்,10 க்கும் அதிகமான மீனவர் உடலில் காயங்கள் ஏற்பட்டது இந்த நிலையில், கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா தேவாலயம் முற்றத்தில் மீனவ குடும்பத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என பல பேர்கள் சாத்மீக நிலை போராட்டம் மூலம் அரசுக்கு வைத்த கோரிக்கை. பெரிய நாயகி தெரு பகுதியில் ஏற்கனவே உள்ள தூண்டில் பாலத்தை மேலும் 300 மீட்டர் நீளம் அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் கடல் அலைகள் தாக்குதலில் இருந்து நாட்டு படகுகளும் மீனவர்களும் பாதுகாக்கப்படுவார்கள் என்ற கருத்தை வலியுறுத்தினார்கள்.
கன்னியாகுமரி மீன்வளத்துறை இணை இயக்குநர் தீபா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள். கன்னியாகுமரி பங்கு பேரவை தலைவர் மற்றும் உறுப்பினர்கள், தேவாலயம் பங்கு தந்தை அருட்பணி உபால்ட் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் தீர்வுகள் எட்டாத நிலையில் போராட்டம் தொடர்கிறது. அரசின் சரியான முடிவு தெரியும் வரை. தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை போராட்டம் நடக்கும் என பங்கு பேரவை குழுவினர் தெரிவித்தனர்.