புலவர் புலமைப்பித்தன் பேரன் திலீபன் புகழேந்தி மலையாள சோசியல் மீடியாவில் புகழ்பெற்ற அதுல்யா பாலக்கல் என்பவரை காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வரும் 2024 பிப்ரவரியில் தங்களுக்கான புதுவரவை எதிர்பார்த்து உள்ளனர்.

திலீபன் புகழேந்தி அவர்கள் எவன் திரைப்படம் இவ்வருடம் வெற்றி படமாக அமைந்திருந்தது. அதைத்தொடர்ந்து சாகாவரம் திரைப்படம் இறுதிக்கட்டப் பணியில் உள்ளார். ஆண்டனி என்கிற திரைப்படம் ஆரம்ப கட்ட வேலைகளும் நடைபெறுகின்றன.

இவ்விரண்டு திரைப்படங்களும் பான் இந்தியா படமாக தமிழ் ,தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் அடுத்த வருடம் மிக பிரமாண்டமாக வெளி வர உள்ளது.
