விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்ரமணியன், கணேசமூர்த்தி, ஆகியோர் தலைமையில் கள்ள வெடி, கள்ளத்திரி, தடுப்பு நடவடிக்கைக்காக மார்க்கநாதபுரம், அன்பின் நகரம், பாறைப்பட்டி, வல்லம்பட்டி, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வல்லம்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் உள்ள தகர செட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆட்கள் நடமட்டம் இருப்பதை பார்த்து உடனடியாக தகர செட்டை சோதனை நடத்தினர்.

அங்கு சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முரசொலி மாறன் (வயது 43) போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். போலீசார் தகரசெட்டில் சட்ட விரோதமாக தயார் செய்யப்பட்ட 30 கிலோ சோல்சா வெடிகள்,மற்றும் மூலப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். அதே போல் மார்க்கநாதபுரம் தகர செட்டில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த சரமாரியப்பன் வயது (51) தப்பி ஓடினர், போலீசார் சட்டவிரோதமாக தயார் செய்யப்பட்ட இருபது கிலோ பேன்சி ரக வெடிகள்,மற்றும் 20 குரோஸ் பட்டாசு திரிகள், மற்றும் மூலப்பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர் . மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.