கோவை, அவினாசி சாலை, சின்னியம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் 1840 எண் கொண்ட டாஸ்மார்க் கடையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும், இரவு 10 மணிக்கு மேல் சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் மது விற்பதாக கிடைத்த தகவல் கிடைத்தது.

கோவை பீளமேடு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டதில் மதுபானங்கள் பதுக்கி விற்பனை செய்து கொண்டு இருந்த பார் ஊழியர் காளிதாஸ் என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 160 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் பார் உரிமையாளர் பாண்டி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.