• Tue. May 7th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Nov 3, 2023

நற்றிணைப் பாடல் 290:

வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்
கொள்ளல் மாதோ, முள் எயிற்றோயே!
நீயே பெரு நலத்தையே; அவனே,
”நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி,
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு” என மொழிப் ”மகன்” என்னாரே.

பாடியவர் : மதுரை மருதன் இளநாகனார்
திணை : மருதம்

பொருள் :
வயலில் வெள்ளாம்பல் பூக்கும். அது தலையில் சூடத் தகுந்த பூ. அதனைக் கன்று போட்டிருக்கும் பசு உண்ணும். அது தின்ற மிச்சிலை (மிச்சத்தை) நடை தளர்ந்த எருது மேயும். இப்படிப்பட்ட நில நாட்டுத் தலைவன் அவன். அவன் தொடர்பினை நீ நிலையாகக் கொண்டிருக்க விரும்பினால், என் சொல்லைக் கேள். நீயோ முள்ளைப் போன்ற பல்வரிசையுடன் பேரழகு மிக்கவள். என்றாலும், அவன், நீர் நிறைந்த பொய்கையில் அன்றாடம் மலரும் புது மலர்களை ஊதித் தேனுண்ணும் வண்டு போன்றவன் என்று கூறுகின்றனர். அவனை “மகன்” என்று யாரும் மதிப்பதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *