

சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கித்
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே அஃது ஆன்று
அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு, கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே,
திணை: குறிஞ்சி
பொருள்:
தன் தொழிலை அன்றி வேறொன்றையும் கல்லாத ஆண்குரங்கு நடுங்கும்படி
முள்ளைப் போன்ற பற்களும், மடமைத் தன்மையும் பெரிய உருவமும் கொண்ட பெண்குரங்கு தன் குட்டியுடன் முகடுகள் உயர்ந்த மலையக்கத்தில் தவழும் மழைமேக மூட்டத்தில் ஒளிந்துகொள்ளும் பெருமலை நாட்டை உடையவனுக்கே அருள் வழங்கியவள் நீ. இனி நீ நான் சொல்வதைக் கேட்கமாட்டாய். என்றாலும் வீணாக ஒன்றை உனக்குக் கூறிவைக்கிறேன்.
தோழி! இதனைக் கேள். அவன்மீது முன்பே அன்பு கொண்ட நெஞ்சத்தில் ஆர்வத்தைப் பொதித்து வைத்துள்ளாய். அவன் ஆன்றோர் செல்லும் வழியிலிருந்து வழுவாமல் நடந்துகொள்ளும் சான்றோனாகத் திகழவேண்டும் என்பதை நன்றாக உணர்ந்து தெளிந்துகொண்டு அவனோடு பழகுவாயாக.
