• Wed. May 1st, 2024

இலக்கியம்:

Byவிஷா

Jun 22, 2023

நற்றிணைப் பாடல் 191:

சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டற் பாவை வன முலை முற்றத்து,
ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம்
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி, . .

எல்லி வந்தன்றோ தேர்?’ எனச் சொல்லி,
அலர் எழுந்தன்று இவ் ஊரே; பலருளும்
என் நோக்கினளே அன்னை; நாளை
மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின்,
அணிக் கவின் உண்மையோ அரிதே; மணிக் கழி . . .

நறும் பூங் கானல் வந்து, அவர்
வறுந் தேர் போதல் அதனினும் அரிதே.

பாடியவர்: உலோச்சனார்.
திணை: நெய்தல்

பொருள்: சிறிய பூவையுடைய ஞாழலின் தேன் பொருந்திய ஒள்ளிய பூங்கொத்துக்கள்; அழகிய கலன்களையுடைய சிறுமியர் நெடிய மணலில் வண்டலாட்டு அயரும்வழி; வண்டல் மண்ணாலே செய்த பாவையின்; அழகிய கொங்கையில் ஒள்ளிய வரியையுடைய சுணங்குபோல மெல்லிதாகப் படுமாறு பரவாநிற்கும்; கண்டல் மரங்களாகிய வேலி சூழ்ந்த கண்டார்க்கு விருப்பம் வருகின்ற சிறிய குடித்தெருவின் கண்ணே நேற்றிரவில் ஒரு தேர் வந்துளதேயன்றோவென உரையாடி; இவ்வூர் முழுதும் அலரெழுந்ததாக; அவ்வலரைச் செவியில் ஏறட்டுக் கொண்ட நம்மன்னை என் போல்வார் பலருமிருப்ப அவருள் என்னையே குறிப்பாக நோக்கா நின்றனள்மன்; நாளைக் கழிக்கரையிலுள்ள முள்ளியினுடைய நீலமணி போலும் மலரைக் கொய்யேனாயின் என் மிக்க அழகு உளதாவது அரியதாகும்; இஃதிவ்வண்ணமாக, நீலமணி போலும் கரிய கழியிடத்துள்ள நறிய பூஞ்சோலையில் அவர் வந்து எம்மை யணையாது தேர் மேல் வறிதே செல்லுதல்; எம்மை இல்வயிற்செறிக்கும் அதனினுங் காட்டில் அரிய துன்பமுடையதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *