இந்திய காவல் பணியில் கடந்த 2004 ஆண்டு தேர்வான ஐ.பி.எஸ். அதிகாரிகளில் பலர் தமிழகத்தில் டி.ஐ.ஜி யாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் 14 டி.ஐ.ஜி.க்களுக்கு ஐ.ஜி. யாக அந்தஸ்த்து கொடுத்து பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது வேலூர் சரக டி.ஐ.ஜி யாக உள்ள ஏ.ஜி.பாபு, உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளான என்.காமினி, அஸ்ராகர்க், மரு.கே.ஏ.செந்தில்வேலன், அவினாஷ் குமார், ஏ.டி.துரைகுமார், சி.மகேஷ்வரி, என்.செட்.ஆசையம்மாள், ஏ.ராதிகா, எஸ்.மல்லிகா, ஆர்.லலிதாலஷ்மி, பி.விஜயகுமாரி, எம்.வி.ஜெயாகவுரி,பி.கே.செந்தில் குமாரி, ஆகியோருக்கு ஐ.ஜி. யாக பதவி உயர்வை அளித்து தமிழக உள்துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.மேற்படி ஐ.ஜி.பதவி உயர்வு பெற்றவர்களில் ஏ.ஜி.பாபு, என்.காமினி, அஸ்ராகர்க், மற்றும் பி.கே.செந்தில் குமாரி ஆகியோர் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.