• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

“ஆளுநரும், தமிழக முதல்வரும் இணைந்து பயணிக்காவிட்டால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கும்” சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி…

ByG.Suresh

Dec 17, 2023

சிவகங்கை மாவட்ட அதிமுக அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் இளங்கோ அவர்கள் ஏற்பாட்டில் அதிமுக சிவகங்கை மாவட்ட செயலாளரும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினரும் பி ஆர் செந்தில்நாதன் தலைமையில் சிவகங்கை காந்தி வீதியில் மாவட்ட அம்மா பேரவை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது பேசிய ஆர்பி உதயகுமார் “சட்ட மசோதா குறித்து ஆளுனரும் முதல்வரும் இணைந்து பயணிக்கவில்லை என்றால் முதல்வரின் வளர்ச்சியை பாதிக்காது. தமிழ் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும். இருவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றும் மழைநீர் அகற்றுவதில் அதிமுகவை குறை கூறினார்கள். அது நடக்கவில்லை என்பதால் தோல்வியை மறைப்பதற்கு வானிலை ஆய்வு மையத்தை குறை கூறுகின்றனர் என்றும் கருணாநிதி சிலை வைப்பதற்கு யாரும் தடுக்கவில்லை என்றும் பேசினார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்எல்ஏ மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.