• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

திமுக தவறு செய்தால் காங்கிரஸ் தட்டிக் கேட்கும்..,

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகளை கேட்டு வாங்குவதோடு மந்திரிசபையில் ஆட்சியில் பங்கு கோருவோம்.

திமுக தவறு செய்தால் காங்கிரஸ் தட்டிக் கேட்கும்.

முருகன் அனைவருக்கும் பொதுவான கடவுள் ஆன்மீகம் செய்ய வேண்டிய இடத்தில் அரசியல் செய்ய பார்க்கிறார்கள்.

காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் பேட்டி,

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் தலைமையில் ஏழைகளுக்கு தையல் இயந்திரம் வழங்கி கேக் கொட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேஷ்குமார்,

காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி தமிழக நிலைமையை தலைமையிடம் கூறி உள்ளோம் நிச்சயமாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு முன்பாகவே இந்த கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று நாங்கள் நிச்சயமாக கேட்போம்.

2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கொடுத்த வாக்குறுதியை எங்களது தொகுதி உட்பட பகுதியில் நிறைவேற்றி உள்ளது. ஆனாலும் அரசு ஆளும் கட்சியாக இருந்தாலும் தவறு செய்தால் தட்டி கேட்போம்.

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி கிராம காங்கிரஸ் அமைப்பு என்ற பெயரில் 16000 கமிட்டிகளை அமைத்து வலுமையாக உள்ளோம். அதன் அடிப்படையில் அதிக தொகுதி கேட்பதில் தவறு கிடையாது. எங்கள் அகில இந்திய கமிட்டியிடம் கூறி இருக்கிறோம். அவர்கள் கேட்டு வாங்குவார்கள். தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கடந்த முறை 25 சீட்டுகளை பெற்றோம் இந்த முறை அதிக இடங்களை வாங்குவதுடன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கோருவோம்.

தமிழகத்தில் முழுமையாக மதுகடை மூடபட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கொள்கை,

முருகன் அனைவருக்கும் பொதுவான கடவுள் ஆன்மீகம் செய்ய வேண்டிய இடத்தில் அரசியல் செய்ய பாஜகவினர் பார்க்கிறார்கள். அவர்கள் வேறுவழியில் செல்கிறார்கள். என்று பேட்டியின் போது தெரிவித்தார்.