• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆபாசமாக படம் எடுக்க மாட்டேன்-இயக்குநர் முத்தையா

இயக்குநர் முத்தையா இயக்கத்தில்கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ள படம் விருமன் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகவிருக்கும் ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது நிகழ்வில்இயக்குநர் முத்தையா பேசும்போது

இதுவரையிலும் எனக்கு பெரும் ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். அதேபோல் இனிமேலும் தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.இப்போது இருக்கும் காலகட்டத்தில் இரு பிள்ளைகளை வளர்ப்பது சிரமமாக இருக்கிறது. இப்போது ஒரு குழந்தை. பிறகு குழந்தையே வேண்டாம். நாம் இருவர்.. நாமே இருவர் என்ற நிலையும் வரலாம்.இப்படத்தின் கதை உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைதான். என் வீட்டிற்கு பக்கத்தில் நேரில் நடந்ததைதான் இப்படத்தில் எடுத்திருக்கிறேன்.


கார்த்தி சாரிடம் இக்கதையைக் கூறியதும் ஒப்புக் கொண்டார். இப்படம் துவங்கும்போது “எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளுங்கள்” என்று ராஜா அண்ணன் கூறினார். ஆனால், இப்படத்தில் அதிகமாக ஆன செலவு வெள்ளையடித்ததுதான்.
நிறைபாண்டி, ‘முனியாண்டி’ என்ற இரு கதாபாத்திரங்கள்தான் படத்தில் முக்கியமானதாக இருக்கும். ‘மைனா’ நந்தினி, அருந்ததி இருவரும் நடித்திருக்கிறார்கள். வெற்றியின் ‘ஜன கன மண’ படமும் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. அவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இளையராஜா சார் என் படத்திற்கு டைட்டில் பாடலைப் பாடி கொடுத்ததில் மிகுந்த பெருமை. இக்கால இயக்குநருக்கு அமைவது அரிது. அனைத்து ஒட்டுனர்களும் இரவில் அமைதியாக வண்டி இயக்க அவர்தான் காரணமாக இருக்கிறார்.செல்வா நன்றாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வடசென்னை படத்தில் வட சென்னை பகுதியை தத்ரூபமாக செட்டாக அமைத்துத் தந்திருந்தார் ஜாக்கி. ஆகையால்தான், இந்தப் படத்திற்கு அவரை அழைத்தோம்.
பொதுவாக நான் கதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது வியாபார நோக்கத்தையும் மனதில் வைத்துத்தான் எடுப்பேன். சூழல்கள் அமைந்தால் நகரம் சார்ந்தும் படம் எடுப்பேன். ஆனால், தவறான படத்தை ஒருபோதும் இயக்க மாட்டேன். என் படத்தில் யார் மனதையும் புண்படுத்தும் வசனம் இடம் பெறாது என்றார்.
இப்படத்தின் டிரைலர் வரும்வரை பதட்டமாகத்தான் இருந்தது. அயல் நாட்டு மொழிப் படங்களைப் பார்த்து நம் கலாச்சாரம் மாறி விட்டதோ? நமது மண் சார்ந்த படங்களுக்கு ஆதரவு இருக்காதோ? என்ற சந்தேகம் துவக்கத்தில் எங்களுக்குள் இருந்தது.ஏனென்றால், தற்போது கிராமத்தில்கூட ஸ்விக்கி, ஸொமேட்டோ வந்துவிட்டது. ஆனால், இந்த ‘விருமன்’ படத்தின் டிரெயிலர் வெளியாகி வெற்றி பெற்றதும் அந்த எண்ணம் மாறிவிட்டது என்றார்