• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிகான் ஹூசைனியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் – பவன் கல்யாண் !

Byஜெ.துரை

Mar 25, 2025

தமிழ்நாடு வில்வித்தை சங்கம் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் ஷிஹான் ஹுஸைனி மார்ச் 25, 2025 அன்று அதிகாலை இரத்தப் புற்றுநோயுடன் போராடி 1:45 மணிக்கு உயிரிழந்தார்.

அவருக்கு இரங்கலை தெரிவிக்கும் விதமாக ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,

அந்த அறிக்கையில், தற்காப்புக் கலைஆசிரியரின் மரணம் மனவேதனை அளிக்கிறது.

புகழ்பெற்ற தற்காப்புக் கலை மற்றும் வில்வித்தை பயிற்றுவிப்பாளர் ஷிஹான் (சிகான்) ஹுசைனி காலமானார் என்பதை அறிந்து நான் மனவேதனை அடைந்தேன். நான் அவரிடம் கராத்தே பயிற்சி பெற்றேன். தற்காப்புக் கலை குரு ஹுசைனி உடல்நிலை சரியில்லாமல் இருப்பது நான்கு நாட்களுக்கு முன்புதான் தெரியவந்தது.

சென்னையில் உள்ள எனது நண்பர்கள் மூலம் விசாரித்து… சிறந்த சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அனுப்ப வேண்டியிருந்தால், நான் தகுந்த ஏற்பாடுகளைச் செய்வேன் என்று கூறினேன். இந்த மாதம் 29 ஆம் தேதி சென்னை சென்று ஹுசைனியைப் பார்க்க முடிவு செய்துள்ளேன். இதற்கிடையில், அவரின் இறப்பு செய்தியை கேட்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஹுசைனியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

சென்னையில், ஹுசைனி மிகவும் கடுமையான விதிகள் மற்றும் விதிமுறைகளுடன் கராத்தே கற்றுக் கொடுத்தார். அவர் சொன்னதை நான் 100% பின்பற்றுவேன். முதலில், அவர் கராத்தே கற்பிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

“நான் தற்பொழுது யாருக்கும் பயிற்சி அளிப்பதில்லை. என்னால் உனக்கு பயிற்சி அளிக்க முடியாது” என்று அவர் கூறினார். ஆனால், விடாமுயற்சியாக நான் பலமுறை வேண்டிய பிறகு, அவர் ஒப்புக்கொண்டார். நான் அதிகாலையில் சென்று மாலை வரை அவருடன் தங்கி, கராத்தேவில் “Black Belt” பெற பயிற்சி பெற்றேன்.

அப்போது நான் கற்ற பாடங்கள் அனைத்தும், நான் “தம்முடு” படத்தில் கிக் பாக்ஸராக நடிக்க பெரிதாக உதவியது. ஹுசைனியின் பயிற்சியின் கீழ் சுமார் மூவாயிரம் பேர் Black பெல்ட் பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் வில்வித்தை விளையாட்டைப் பிரபலப்படுத்த ஹுசைனி பாடுபட்டார். அவர், A THE ARCHERY ASSOCIATION OF TAMIL NADU (TAAT) முக்கியமான பொறுப்புகளை வகித்தார்.

ஹுசைனியின் திறமைகள் தற்காப்புக் கலைகள் மற்றும் வில்வித்தை ஆகிய துறைகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவர் ஒரு பன்முகத் திறமைசாலி. அவர் இசையில் தேர்ச்சி பெற்றவர். நல்ல ஓவியர் மற்றும் சிற்பி. அவர் பல படங்களில் நடித்தார். அவர் ஊக்கமளிக்கும் உரைகளை வழங்கினர். சென்னை ரோட்டரி கிளப் மற்றும் பிற மாநாட்டு அரங்குகளில் உரை நிகழ்த்தச் செல்லும்போது என்னை தன்னுடன் அழைத்துச் செல்வார். பன்முகத் திறமை கொண்ட ஹுசைனி, இளைஞர்களுக்கு தற்காப்புக் கலைகளை இன்னும் எளிதாகக் கிடைக்கச் செய்ய விரும்பினார். அவரது மரணத்திற்குப் பிறகு அவரது உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யப்படும் என்ற அறிவிப்பு அவரது நல்ல மனநிலையை வெளிப்படுத்தியது. ஹுசைனியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.