ஐ லவ் யூ கோவை பூங்காக்களில் தீபாவளி பண்டிகையொட்டி குவிந்த பொதுமக்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

ஸ்மார்ட் சிட்டியான கோவையில் பல்வேறு குளங்கள் உள்ளன. அதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குளங்கள் பராமரிக்கப்பட்டு, பூங்காக்கள் அமைக்கப்பட்டது. இதில் நாள்தோறும் காலை, மாலை என இரு வேலைகளில் நடைப் பயிற்சி செல்வோர் அதிகமாக பயன்படுத்தி பயன் அடைந்து வருகின்றனர். குழந்தைகளுக்காக விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் குழந்தைகள் விளையாடும் மகிழ்கின்றனர். சிற்றுண்டிகளும் குளக்கரையை சுற்றி உள்ளது.

அதில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம், பானி பூரி போன்ற தின்பண்டங்களை வாங்கி உண்டு பொழுதுகளைப் போக்கி வருகின்றனர். மேலும் குளக்கரையில் படகு இல்லம் அமைத்து படகு சவாரியும் தமிழக சுற்றுலா துறை சார்பில் பராமரிக்கப்பட்ட வந்த நிலையில், அதனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பராமரிக்க முடியாது நிலை ஏற்பட்டதால், அதனை மீண்டும் மாநகராட்சி இடமே ஒப்படைத்தனர்.

கடந்த சில மாதங்களாக படகு இல்லம் பராமரிப்பின்றி, மூடிக் கிடந்தது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று படகுகளை இயக்கியனர். இதனை தொடர்ந்து அங்கு குவிந்த பொதுமக்கள் படகுகளில் ஏறி சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஐ லவ் யூ கோவை செல்ஃபி ஸ்பாட்டில் இன்று அவர்கள் அணிந்து இருந்த தீபாவளி புத்தாடைகளுடன் புகைப்படங்களை எடுத்து அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.