வாரணாசியில் தனது தந்தைக்கு அஸ்தியை கரைத்து விட்டு, சென்னை விமான நிலையத்தில் வருகை புரிந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய தமிழிசை சௌந்தரராஜன் நாம் எல்லாரும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்தது மிக்க மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி மோடி அரசை குறித்தும் அமித்ஷாவை பதவி நீக்க செய்ய வேண்டும் என பதிவிட்டதை குறித்து எழுப்பிய கேள்விக்கு,
எதிர்மறையான கருத்துகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என்று நழுவிச் சென்றார்.