• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நர்சு ரம்யா கொலை வழக்கில் கணவர் மாமனார்| மாமியார் உள்பட 3 பேர் கைது

ByKalamegam Viswanathan

May 8, 2023

திருப்பரங்குன்றம் முனியாண்டிபுரம் நர்சு ரம்யா கொலை வழக்கில் கணவர் மாமனார்| மாமியார் உள்பட 3 பேர் கைது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விளாச்சேரி முனியாண்டிபுரம் பகுதியில்கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நர்ஸ் ரம்யா கணவர் சதீஷால் கொத்தனார் வேலைக்கு தளம் மட்டப்படுத்த பயன்படுத்தப்படும் திம்ஸ் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டார் .இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குபதிவு விசாரணை செய்து வந்தனர்.போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நர்ஸ் ரம்யாவும் கணவர் சதீஷும் தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர் .சதீஷ் அங்கு டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார் இருவரும் காதலித்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதிருமணம் செய்து கொண்டனர். கணவன் மனைவி இருவரும் முனியாண்டி புறத்தில் குடியேறி அங்கு வசித்து வந்த நிலையில் கணவர் சதீஷ்க்கும் ரம்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. குடிப்பழக்கம் மற்றும் போதை மாத்திரை சாப்பிடும் பழக்கம் கொண்ட சதீஷ் அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதில் ரம்யா உசிலம்பட்டியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று கடந்த 10 நாட்களுக்கு முன் திரும்பி வந்துள்ளார்.
மீண்டும் சதீஷ் ரம்யா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது”இந் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவர் சதீஷ் கொத்தனார் வேலைக்கு பயன்படுத்தப்படும் திம்ஸ் கட்டையால் ரம்யாவின் தலை உட்பட பல்வேறு இடங்களில் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ரம்யா பலியானார்.இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் சதீஷ் இடம் விசாரணையில் செய்ததில் இருவரும் வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சதீஷின் தாய் , தந்தை இருவரும் அவரை (ரம்யாவை) விளக்கி விடுமாறு கூறியுள்ளனர்.
இதனை ஒட்டி ஏற்பட்ட தகராறில் சதிஷால் ரம்யா படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் போலீசார் ரம்யாவின் கணவர் சதீஷ்(வயது32) மாமனார் செல்வம் (வயது 55) மாமியார் பஞ்சவர்ணம் (வயது 50) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்…