வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய வழக்கில் 20 வருடம் தலைமறைவாக இருந்தவர்கள் கேரளாவில் வைத்து கைது.. கன்னியாகுமரி குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.

கடந்த 2005 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மங்காவளை பகுதியை சேர்ந்த சதாசிவம் என்பவரின் மனைவி அருந்ததியிடம் 2005 ஆம் ஆண்டு ஸ்ரீ சத்தியபாமா ரெசிடென்சியல் சென்ட்ரல் ஸ்கூலில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 250,000/- பெற்றுக் கொண்டு வேலை வாங்கி கொடுக்காமலும் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமலும் மோசடி செய்துள்ளனர்.
மேற்படி மோசடி தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். குற்றவாளிகள் இருவரும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நீதி மன்றம் அவர்கள் மீது பிடியாணை பிறப்பித்தது .
மேற்படி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R.ஸ்டாலின் IPS உத்தரவிட்டிருந்தார்.அந்த உத்தரவின் படி மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.சண்முக வடிவு அவர்களின் தலைமையிலான போலீசார் மாவட்ட குற்றப்பிரிவு குற்ற எண் 03/2005 U/S 406,420 r/w 34 IPC இல் 20 வருடமாக தேடப்பட்டு வந்த கொல்லங்கோடு காக்காவிளை பகுதியை சேர்ந்த பகீரதன் என்பவரது மகன் குசல குமார் (60), மற்றும் அவரது மனைவி சதிகுமாரி (59) ஆகியோரை திருவனந்தபுரத்தில் வைத்து கைது செய்தனர்.
குசலகுமார் கேரளாவில் தனது பெயரை கௌதம குமார் என்று மாற்றி 20 வருடமாக தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்கள்.




