• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி சிறுகுறு தொழில் நிறுவனங்களின் 8ம் கட்டம் போராட்டமாக மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு

BySeenu

Dec 26, 2023

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள COWMA அலுவலகத்தில்
தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், மற்றும் அமைப்பை சேர்ந்த ஜெயபால் பேசுகையில் சிறுகுறு தொழில் நிறுவனங்களின் மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மின்சார கட்டணம் உயர்வினால் தொழில் பாதிப்பு ஏற்பட்டதால் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதை தெரிவித்தனர்.
30 வகையான மின் கட்டண உயர்வு ஏற்படுத்தியுள்ளனர் எனவும் அதில் நாங்கள் முன் வைப்பது 5 வகையான கட்டண குறைவுக்கான கோரிக்கை தான் எனவும் தெரிவித்தனர். இது குறித்து முதல்வரிடம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறோம் என கூறிய அவர்கள் சிறுகுறு தொழில்களை பாதுக்காக்க கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவித்தனர்.
430% நிலைக்கட்டணத்திற்கு கட்டணம் உயர்த்தி உள்ளனர். மாதாந்திர கட்டணம் உயர்த்தி உள்ளனர். இதனால் கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப் படுகிறோம். நகை நட்டல்லாம் வைத்து மின் கட்டணம் செலுத்தும் அளவிற்கு தொழில் துறையினர் தள்ளப்பட்டுள்ளனர் என்றனர்.
118 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம் என தெரிவித்த அவர்கள் தந்தி அனுப்புவது, கடை அடைப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு, மாவட்ட ஆட்சியர் சந்திப்பு என தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்தி வருகிறோம் என்றனர். மேலும்
தொழில் நிறுவனங்களின் மேற்கூரைகளில் சோலர் போர்டு அமைப்பதற்கு 1.53 காசு என மின் வாரியம் எங்களிடம் வசூல் செய்து வருகின்றனர் எனவும், ஆனால் பிற மாநிலங்களில் 50% அரசு ஏற்றுக் கொள்கிறது என தெரிவித்தனர்.

இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். மேலும் தொழில் துறையினர் அரசியலுக்கு அப்பாற்பட்டு வேலை பார்த்து வருகிறோம்.
எங்கள் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமே தவிர.. இதை அரசியலாக்க வேண்டும். வாழ்வாதார பிரச்சனையாக மின் கட்டணம் உயர்வு உள்ளது. முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். அரசு பிரச்சனைக்கு தீர்வு கொடுக்க வேண்டும் என்கிறோம். மேலும் தொழில் பாதுகாப்பு மற்றும் நலிந்த தொழிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

மின்சார வாரியம் தொடர்ச்சியாக தொழில் துறையினருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர் எனவும் தெரிவித்தனர். 1.75 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக , பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் என பல்வேறு கட்சியினர் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். மனித சங்கிலி போராட்டத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபடுகின்றனர் என கூறினர். தமிழ்நாட்டில் திட்டமிட்டு MSME யை அழிப்பதற்கு வழிக்காட்டபடுகிறதோ என அச்சம் எழுவதாக கூறினர். எனவே முதல்வர் விழித்து கொண்டு தொழில்துறையை பாதுகாக்க வேண்டும் என்றார். பல்வேறு மாநில முதலமைச்சர்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவேற்பதாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகையினால் நம் மாநிலத்தில் இருக்க கூடிய சலுகைகளை வாங்கி கொண்டு நம் இடத்தை உற்பத்தி சென்டர்களாக இல்லாமல் அசம்பல் சென்டர்களாக மாற்றி வருவதாக குறுசிறு நடுத்தர தொழில்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்படுகிறது எனவும் இதனை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
அதிமுக பொதுக்குழுவில் ஏற்கப்பட்டுள்ள தீர்மானத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்களின் பிரச்சனைகள் கொண்டு வராது பற்றி தெரியவில்லை என கூறிய அவர்கள் ஆனால் எதிர்கட்சி தலைவர் அறிக்கை வெளியிட்டு இருந்தார் என தெரிவித்தனர்.