தமிழகம் முழுவதும் அரசால் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை நடை பெற்று வருகிறது. நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை, ,அரசு விற்பனைக்கான நேரம் வகுத்து கொடுத்துள்ள நிலையில் விருதுநகர் நகர் முழுவதும் அதிகாலை ஆறு மணி முதல் இரவு முழுவதும் கள்ள சந்தையில் மது விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

இது குறித்து நாம் “டாஸ்மாக் கடைகளில் 145 ரூபாய்க்கு விற்கும் போது நீங்கள் குவாட்டர் 250 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறீர்கள் எவ்வாறு சரக்கு கிடைக்கிறது என்று விசாரித்தபோது ” டாஸ்மாக் கடையில் உள்ள இன்சார்ஜ் வசம் முதல் நாள் இரவில் பெட்டி பெட்டியாக மொத்தமாக வாங்கி கொண்டு மறுநாள் விற்பனை செய்து வருகிறோம் என்று கூறினார்.
மேலும் அவர்களுக்கு பங்கு கொடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் அதிக விலைக்கு விற்க நிர்பந்திக்க படுகிறோம் என்று கூறினார். கள்ள சந்தையில் மது விற்பனை செய்வதை காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் கட்டுபடுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வளர்களின் கோரிக்கையாக உள்ளது.






