• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நடிகை குஷ்பு மகள் அவந்திகாவின் கவர்ச்சி புகைப்படங்கள்..!

Byவிஷா

Apr 29, 2023

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் மகள் அவந்திகா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
80-90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் குஷ்பு. தற்போது நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலில் தீவிரமாக செயலாற்றி வரும் இவர், சமீபத்தில் தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதேடு மட்டுமல்லாமல் பாஜக நிர்வாகியாக தொடர்ந்து கட்சிப்பணிகளை மேற்கொண்டு வரும் குஷ்பு அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவின் காமெடி இயக்குனர் சுந்தர்.சி-யை கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நடிகை குஷ்புக்கு அவந்திகா, அனந்திகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குஷ்புவை போலவே அவரது மகள்களும் குண்டாக இருந்ததால் உருவ கேலியை எதிர்கொண்ட நிலையில், இருவரும் தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொண்டுள்ளனர்.
அதேபோல் குண்டாக இருந்த நடிகை குஷ்புவும் கடுமையான உடற்பயிற்சிக்கு பின் உடல் எடையை குறைத்துள்ளார். குஷ்புவின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர் இளமைக்கு திரும்பியுள்ளார் என்று கூறிவந்தனர். இதனிடையே லண்டனில் படித்து வரும் நடிகை குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா வெளியிட்டுள்ள க்ளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைகப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், படிப்பு முடிந்தவுடன் அவந்திகா சினிமாவில் நடிக்க உள்ளதால் இப்போதே இது போன்று புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாரோ என்று கேட்டு வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்களுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.