நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் வீட்டிற்கும் புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா கொடியேற்றம் வரும் 29 ம் தேதி நாளை தொடங்க உள்ளது. திருவிழாவிற்கு வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணியில் ஒவ்வொரு ஆண்டும் குவிந்து வருகின்றனர்.

எனவே அவர்களின் பாதுகாப்பு கருதி நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்க பத்து நாட்கள் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். அதைப்போல் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நாளை நாகை கீழ்வேளூர் வட்டார பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.