மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியின் அருகே கால்வாய் ஒன்று ஆபத்தான நிலையில் செல்வதாக ஏற்கனவே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்திருந்தனர். மழைக்காலங்களில் கால்வாய் முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதும் அருகில் உள்ள சுற்று சுவர் ஈரப்பதம் அதிகமாகி சிறிது சிறிதாக பெயர்ந்து விழுவதும் ஆகையால் சுற்றுச்சுவரை அகலப்படுத்த வேண்டும். மேலும் கால்வாயை அகலப்படுத்தி மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக பள்ளி வளாகத்திற்குள் இருந்த மரம் ஒன்று பள்ளி சுவர் மீது நேற்று விழுந்துள்ளது. விடுமுறை தினம் என்பதால் மாணவ மாணவிகள் இல்லாத நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது தகவல் அறிந்து அருகில் இருந்த பொதுமக்கள் தாமாக முன்வந்து மர கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தினர்.
மேலும் தலைமை ஆசிரியருக்கும் தகவல் தெரிவித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர் பள்ளியின் சுற்று சுவர் அருகில் உள்ள கால்வாயை அகலப்படுத்த வேண்டும். சுற்று சுவரை ஆபத்து இல்லாத வகையில் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பள்ளி வளாகத்திற்குள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.








