நெல்லிக்காய் போல் சிதறி கிடந்த 28 கட்சிகளை ஒன்றிணைத்து மோடிக்கு சிம்ம சொப்பனமாக ஸ்டாலின் திகழ்கிறார் – அமைச்சர் பெரியகருப்பன்.
எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் பம்பு செட்டுக்கு 1யூனிட்க்கு மின்சாரத்தை ஒரு பைசா குறைக்க போரடிய விவசாயிகளுக்கு குறைக்காமல் இருந்தவர் தான் எம்ஜி ஆர். ஆனால், அவரை வள்ளல், கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் என்றெல்லாம் கூறுகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் எல்லோருக்கும் எல்லாம் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது.
இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று பேசினார். அப்போது பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் சட்ட ஒழுங்கை காப்பாற்றினாரோ, இல்லையோ தமிழக பாரதிய ஜனதா தலைவரா ஆன பிறகு சமூக விரோத காரியங்களில் ஈடுபட்டு முத்திரை பெற்ற குற்றவாளிகள் அனைவரையும் பாரதிய ஜனதா கட்சியில் சேர்க்கின்ற வேலையில் செய்து கொண்டிருக்கிறார் என்றார் .
![](https://arasiyaltoday.com/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-03-at-2.36.11-PM-1-1-1024x576.jpeg)
மேலும் ஜனநாயகத்தின் போர்வையில் சர்வாதிகார ஆட்சியை மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது என்றும் ஈடி, வருமான வரித்துறை, போன்றவர்களை வைத்து நெருக்கடிகளை தந்து கொண்டிருக்கின்றனர். நெருக்கடி காலங்களை சந்தித்த இயக்கம் தான் திமுக என்றும் அழிப்போம், ஒழிப்போம் என்பதெல்லாம் அரசியல்வாதி, பல பொறுப்புகளை வகித்தவர் வாயில் இதெல்லாம் வரக்கூடாது என்றும் இது மிகப்பெரிய ஆபத்தை இந்தியா அழைத்து செல்வதற்கு அர்த்தம் என்றார்.
ஹிட்லர் இன்னும் கட்டவில்லை மோடி வடிவில் நடமாடிக் கொண்டிருக்கிறார் ஹிட்லரை வீழ்த்தியது போல் இந்திய மக்கள் மோடிய வீழ்த்துவார்கள் என்றார் நெல்லிக்காய் போல் சிதறி கிடந்த 28 கட்சிகளை ஒன்றிணைத்து மோடிக்கு சிம்ம சொப்பனமாக முதலமைச்சர் ஸ்டாலின் விளங்கி வருகிறார் என்றார்.
விவசாயிகளின் தோழனாக கலைஞர் இருந்து உள்ளார்.
மேலும் இந்திய துணைக்கண்டத்தில் முதன்முதலாக பம்பு செட்டு இலவச மின்சார திட்டத்தை கொடுத்துவர் கலைஞர் என்றும் மறைந்தவர்களை பற்றி பேசுவது நாகரிகமாக இருக்காது என்பார்கள் எம்ஜிஆரை பொருத்தவரை சொல்வார்கள் வாரி வள்ளல் என்பார்கள், கொடுத்து கொடுத்து சிவந்த் கரங்கள் என்று எல்லாம் கூறுவார்கள் ,அப்படிப்பட்ட எம்ஜிஆர் ஆட்சியில் விவசாயிகள் பயன்படுத்திய பம்பு செட்டுக்கு ஒரு யூனிட்டுக்கு 7 பைசாவோ 8 பைசாவோ இருந்தது அதனை 1 பைசா குறைக்க போராடினார்கள் விவசாயிகள் போராட்டம் எல்லாம் செய்தார்கள் பல இடங்களில் துப்பாக்கி சூடெல்லாம் நடந்தது. வள்ளல் என்று சொன்ன எம்ஜிஆர் ஒரு பைசா கூட குறைக்கவில்லை என்றும் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு எம்ஜிஆர் ஆட்சியில் ஒரு பைசா குறைக்க போராடினார்கள் விவசாயிகள் ஆனால் கலைஞர் ஒட்டுமொத்தமாக பயன்படுத்தப்படும் பம்பு செட்டுக்கு இலவசம் என மின்சாரத்தை பயன்படுத்துங்கள் என்றாரே அவர்தான் விவசாயிகளின் தோழன் என்றார் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன்.