பாரத அன்னையை போற்றும் விதமாக பாரத் கி ஜே என்று சொல்லாமல் கருணாநிதி வாழ்க என்று சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள இந்து முன்னனி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், அமைச்சர் சேகர்பாபு நாக்கில் சனி இருக்கிறது அது 2026 தேர்தலில் தெரியும் எனவும் சாடியுள்ளார்.

கோவையில் இந்து வியாபாரிகள் நல சங்க மாநாடு ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது இந்த மாநாட்டில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
மேலும் HBN எனும் பெயரில் ஹிந்து பிசினஸ் நெட்வொர்க் என்ற அமைப்பை தொடங்கி அதற்குள் இந்து வியாபாரிகள் அனைவரையும் ஒன்று படுத்தி ஒரு அமைப்பாக செயல்படுத்த இந்த மாநாட்டில் பேசப்பட்டிருப்பதாகவும் இந்து வியாபாரிகள் நல சங்கம் என்பது வியாபாரிகளிடையே பிளவு ஏற்படுத்தும் நோக்கத்தில் அல்ல இந்து வியாபாரிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இன்றைய தினம் சிதம்பரத்தில் நக்சலைட் சிந்தனையுள்ள தி.க காரர் ஒருவர் நான் தான் சாமி என்று பாலை எடுத்து தலையில் ஊற்றிக் கொள்கிறார் இதனை அரசும் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் திருப்பரங்குன்றத்தில் ஆடு வெட்ட கோழி வெட்ட அனுமதி கொடுக்கிறார்கள் என்றும் கூறியதுடன் இந்த அரசாங்கம் நாத்திக அரசாங்கம் கடவுள் மறுப்பு அரசாங்கம் இந்துக்களுக்கு மட்டும் விரோதமாக செயல்படுகிறது என்றும் விமர்சித்தார்.திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த நான்கு ஆண்டுகளில் 171 கோவில்களுக்கு மேல் இடிக்கப்பட்டுள்ளதாகவும் எங்காவது மசூதி தேவாலயமோ இடிக்கப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றும் சட்டவிரோதமான தேவாலயங்கள் நிறைய உள்ளதாக பட்டியல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,கோவையில் இந்து வியாபாரிகளை ஒற்றுமை படுத்துவதற்காக ஐந்து ஆண்டுகளாக மிகச் சிறப்பாக இந்த இந்து வியாபாரிகள் நலச்சங்கம் செயல் பட்டுக் கொண்டிருப்பதாகவும் கோயமுத்தூரில் காவல்துறையும் பல்வேறு ரவுடிகளும் இந்து வியாபாரிகளுக்கு இடைஞ்சல் கொடுப்பதாகவும் காவல்துறையினருக்கும் ரவுடிகளுக்கும் மாமூல் கொடுக்க வேண்டிய ஒரு சூழல் நிலவி வருவதாகவும் கூறினார்.அரசும் மாநகராட்சியும் சிறிய வியாபாரிகளுக்கு ஏதாவது ஒரு அடையாள அட்டை கொடுத்து அவர்களுக்கு யாரும் தொந்தரவு கொடுக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் பாரத அன்னையை போற்றும் விதமாக பாரத் கி ஜே என்று சொல்லாமல் கருணாநிதி வாழ்க என்று சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பிய காடேஸ்வரா சுப்பிரமணியம் அமைச்சர் சேகர்பாபு நாக்கில் சனி இருக்கிறது அது 2026 தேர்தலில் தெரியும் எனவும் சாடினார்.




