அரியலூர் அருகே உள்ள இலிங்கத்தடிமேடு சித்த சக்தி அருள்ஜோதி வள்ளலார் கல்வி நிலையம்,அரசு உதவி பெறும் கே.ஆர்.வி நடுநிலைப் பள்ளி வளாக கூட்டரங்கில் , கல்வி பயிலும் ஏழை, எளிய ஆதரவற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி தொழில் நெறி வழிகாட்டல் நிகழ்ச்சி,திருக்குறள் முற்றோதல் நிகழ்வுடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வள்ளலார் கல்வி நிலைய செயலாளர் முனைவர் கொ.வி.புகழேந்தி தலைமை தாங்கினார்.பள்ளியின் தலைமை ஆசிரியர் பெ. சௌந்தரராஜன் நிகழ்ச்சி வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் அ.கலைச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, பேசுகையில்உயர்கல்வியும் வேலைவாய்ப்பும் குறித்தும், அரசு சலுகைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும், அரசுவேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வின் வழிஅரசுவேலைவாய்ப்புகள் குறித்தும், மாணவர்களின் எதிர்காலம் குறித்த நிகழ்வுகளையும், மாணவர்களுக்கு சிறப்பாக எடுத்துரைத்தார்.

குழந்தைகள் நல அறக்கட்டளை (Childrens Charitable trust) மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிக்கில்ராஜ்,தொடர்ந்து பேசுகையில் ஒவ்வொரு மாணவர்களின் சிறப்புதிறன்களையும்,மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பணியாளர் கணபதி மாணவர்களுக்கு நற்பண்புகளை வளர்ப்பதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர். .200 மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சி யின் முடிவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பணியாளர் மனோஜ் நன்றி கூறினார்.













; ?>)
; ?>)
; ?>)