குமரி மாவட்டம் ஒரு சுற்றுலா மாவட்டம் என்பதால் தினம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் பகுதி.

குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர்.
ஜெயராமபாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர்.
அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டாரத்தில். அப்டா மார்க்கெட்,தாழக்குடி,
பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தாழாக்குடி பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் கடை வளாகத்திற்குள், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
அக்கம் பக்கத்தினர் ஏற்கனவே இந்த பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் மத்தியிலான புகார்கள் இருந்த நிலையில்,
கடைகளுக்கு வெளியே பல இடங்களில் சிறிய, சிறிய கும்பலாக விறகுகள், காய்ந்த தென்னை ஓலைகள் குவியல், குவியலாக,குவித்து வைத்திருப்பது குறித்த சந்தேகம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டதால்,

கடைகளுக்கு வெளியே உள்ள விறகு குவியலை அதிகாரிகள் சோதனை இட்டபோது. விறகுகள், காய்ந்த தென்னை ஓலைகள் உள்ளே கட்டு,கட்டாக
புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகளின் சோதனையில் கிடைத்தது.
இதனை அடுத்து அதிகாரிகள் வணிக வளாகத்தில் இருந்த 3_ கடைகளில் இருந்து 120 கிலோ புகையிலை பொருட்களை அழித்த அதிகாரிகள்.3_ கடைகளுக்கும் சீல் வைத்ததுடன். கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதமும் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் விதித்து நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது.