தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் கொடைக்கானல், ராமேசுவரத்தில் விரைவில் ஹெலிகாப்டர் தளம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சுற்றுலாத்துறையின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னையில் சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில், தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் கொடைக்கானல், ராமேசுவரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்குவதற்காக ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியின் அழகை இரவிலும் ரசிக்க லேசர் உதவியுடன் ஒளியூட்டம் செய்ய முயற்சிகள், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் பார்வையாளர் மாடம், முதலியார்குப்பம் படகு குழாம் அருகில் ஓடியூர் ஏரியில் அமைந்துள்ள தீவுப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் படகில் செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதால் இங்கு ரூ.50 லட்சம் மதிப்பில் நீர் விளையாட்டுகள், கடற்கரை விளையாட்டுகள், தேநீர் விடுதி போன்ற வசதிகளை செய்வதற்கு அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது.
உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் ஈர்த்துள்ள, பிச்சாவரம் அலையாத்தி காடுகளை மேம்படுத்த, இங்கு பூங்கா, திறந்தவெளி முகாம், காட்சி கோபுரம், படகு குழாம், தங்கும் அறைகள், உணவகம் போன்றவற்றை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றம் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்..,
- துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு 5 பேர் தேர்வு…
- நடு வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இயந்திர கோளாறு.,
- ஈஷா கிராமோத்சவம் இரண்டாம் கட்டப் போட்டிகள்..,
- தடை தாண்டும் போட்டியில் 2ம் இடம் பெற்ற மாணவனுக்கு பாராட்டு..,
- புத்தூர் பகுதியில் பேச தவெக விஜய்க்கு அனுமதி..,
- இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்..,
- சுற்றுச் சுவர் அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ..,
- மரம் நடும் விழா மூலம் தங்கசாமிக்கு அஞ்சலி.,
- வெட்டிவேர் சாகுபடியை அழித்த வேதாரண்யம் வட்டாட்சியர்..,