• Mon. Mar 24th, 2025

மாசி சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு குல தெய்வ கோவில்களுக்கு படையெடுத்த மக்களால் – உசிலம்பட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

ByP.Thangapandi

Mar 9, 2024

இன்று மாசி சிவராத்திரி திருவிழா உலகம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது., இந்த மாசி சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான குல தெய்வ கோவில்களில் சாமி தரிசனம் செய்ய மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உசிலம்பட்டியை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றனர்.

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என நான்கு மாவட்டங்களை இணைக்கும் மையப்பகுதியான உசிலம்பட்டி நகர் பகுதி வழியாக
ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் சூழலில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்தவாரே சென்று வருகின்றன.

போக்குவரத்தை சரி செய்யவும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு உசிலம்பட்டி டிஎஸ்பி விஜயக்குமார் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழாவின் போதும், சுப முகூர்த்த தினங்களின் போதும் ஏற்படும் இது போன்ற போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உசிலம்பட்டியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை கனவாக உள்ளதாக மனக் குமுறல்களுடன் மக்கள் கடந்து சென்று வருகின்றனர்.