• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோவையில் இரவு முழுவதும் பெய்த கனமழை – பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…

BySeenu

Nov 9, 2023

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இரவு துவங்கிய மழை தற்பொழுது வரை பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் நிலையில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் மழை நீர் ஆர்ப்பறித்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக புறநகர் பகுதிகளில் வீரபாண்டி பகுதியில் உள்ள தரைப்பாலம் மாநகர் பகுதியில் அவிநாசி மேம்பாலத்திற்கு அடியிலும் லங்கா கார்னர் ரயில் பாலத்திற்கு அடியிலும் அதிக அளவிலான மழை நீர் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் விடுமுறை அறிவித்துள்ளார்.