மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அரசு வட்டார மருத்துவ மனை இயங்கி வருகிறது இந்த மருத்துவமனைக்கு திடீரென வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவர்கள் வருகை பதிவேடு அரசு மருத்துவமனைக்கு வருகை தரும் பொது மக்கள் எவ்வாறு சிகிச்சை பெறுகின்றனர். எத்தனை பேர் தொடர் சிகிச்சை
எடுத்துக் கொள்கின்றனர் என மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார். சிகிச்சை பெற்று சென்றவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து உடல் நலத்தை பார்த்துக் கொள்ளும் படி அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது வட்டார மருத்துவர் வளர்மதி மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளிட்ட பணியாளர்கள் உடனிருந்தனர்.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)