• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

5பேருக்கு மறுவாழ்வு அளித்த தலைமை ஆசிரியர்…

BySeenu

Jan 28, 2025

இருசக்கர வாகன விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தலைமை ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் 5 பேருக்கு மறுவாழ்வு அளித்து உள்ளது.

கோவை, பொள்ளாச்சி நல்லூர் சக்தி கார்டன் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார். அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 24 ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் சிக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி மூளைச்சாவடைந்த அவரின் கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம், கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கு தாராளமாக பெறப்பட்டு உள்ளது. இதனால் ஐந்து பேருக்கு மறுவாழ்வு அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.