கோவை வழியாக கேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கேரள சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து வாளையாறு சுங்கச்சாவடி அருகே நேற்று சுங்கத்துறை ஆய்வாளர் பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவையில் இருந்து கேரளா நோக்கி வந்த கார் ஒன்றை சுங்க அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையின் போது காரில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்ததும், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த 2.54 கோடி பணத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவானி சிங் (33) என்ற இளைஞரை கைது செய்தனர். இதை அடுத்து பறிமுதல் செய்த பணத்தை பாலக்காட்டில் உள்ள வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் பணம் எங்கு இருந்து யாருக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து கேரளா சுங்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)