தமிழ்நாடு கல்வி சுற்றுலா களப்பணி என்ற தலைப்பில் மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களை விமான நிலையம், கீழடி உள்ளிட்ட இடங்களில் அழைத்துச் சென்றது மாணவர்களிடையே நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு கல்வி சுற்றுலாக் களப்பணி என்ற தலைப்பில் தனியார் அறக்கட்டலுடன் இணைந்து விளிம்பு நிலை உள்ள மாநகராட்சி பள்ளி மாணவர்களை சுற்றுலாவாக அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதில் ஒரு பகுதியாக மதுரை சாத்தமங்கலம், சிங்காரதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுத்தும் நடுநிலைப்பள்ளி படிக்கு 106 மாணவர்களை மதுரை விமான நிலையம், கீழடி உள்ளிட்ட இடங்களில் தலைமை ஆசிரியர்கள் இன்று மாணவர்களை சுற்றுலாவாக அழைத்துச் சென்றனர் சென்றனர்.
இந்த நிலையில் மதுரையை விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட மாநகராட்சி மாணவர்களை விமானம் தரையறுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து கீழடி சென்று தமிழர்களின் பாரம்பரியத்தை பார்க்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.