ஓணம் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் அனைவரும் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

சகோதரத்துவம் மற்றும் மனித நேயம் நிறைந்த பண்டிகையான ஓணம் பண்டிகை ஜாதி மத பேதமின்றி அனைவராலும் சிறப்புடன் கொண்டாடப்படும் பண்டிகை. நல்லாட்சி செய்தால் பல நூற்றாண்டுகள் தாண்டியும் ஆட்சி செய்தவர்களை சரித்திரம் போற்றும் என்பதற்கு ஒரு உதாரணமும் இந்த ஓணம் பண்டிகை.
இந்த திருநாளில் மகிழ்ச்சி நிறைந்த குடும்பச் சந்திப்புகள், விருந்தோம்பலின் இனிமை, கலைகளின் உற்சாகம் ஆகியவை நம் குடும்பங்களில் ஆனந்தம் பொங்கச் செய்கின்றன. நன்மை, செழிப்பு, ஆரோக்கியம் நிரம்பிய வாழ்க்கையை ஓணம் பண்டிகை எல்லோருக்கும் அருளட்டும். இந்த இனிய நாளில் சமூகத்தில் ஒற்றுமை, சகோதரத்துவம் வலுவடைந்து, நல்லிணக்கம் பொங்கட்டும்.