நாகர்கோவில் பிரஸ்கிளப்பின் தீபாவளி வாழ்த்து, அன்பளிப்பு நிகழ்வில்
குமரி ஆட்சியர் அழகு மீனா இ.ஆ.ப. பங்கேற்று வாழ்த்து பெற்று, நானும் செய்தியாளர் குடும்பத்தே சேர்ந்தவள் என பெருமிதம் பேசினார்.
நாகர்கோவில் பிரஸ் கிளப்பின் 23- வது தீபாவளி சிறப்பு நிகழ்வில் பங்கேற்று பேசிய ஆட்சியர் அழகு மீனா இ.ஆ.ப. நாகர்கோவில் பிரஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் 48_ பொருட்கள் அடங்கிய “கிட்டை” வழங்கி ஆட்சியர் அழகு மீனா பேசினார்.

குமரி மாவட்டம் எனக்கு முற்றிலும் புதிய இடம். இங்குள்ள பூகோள நிலை, மக்களின் குணாதிசயங்கள் பற்றி ஏற்கனவே ஓரளவு புரிந்து கொண்டு இந்த மாவட்டத்தின் ஆட்சியாளராக பதவி ஏற்ற அடுத்த நொடியே இந்த மாவட்டத்தில் உள்ள ரப்பர் கழக பணியாளர்களின் நீண்ட நாள் ஊதிய உயர்வு பற்றி அன்றைய வனத்துறை அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் பங்கேற்றது. மாவட்ட மக்களின் உடனடியாக தீர்வு காண வேண்டிய விஷயங்கள் குறித்து அதிகாரிகள் மட்டத்தில் கலந்துரையாடல் என்ற நிகழ்வுடன் நான் தாம்பரத்தில் பணியாற்றிய போதே பல்வேறு பத்திரிகைகளிலும். வெளியாகும் பல்வேறு எதிர் கருத்துகளை வாசித்து செய்தியில் உண்மை தன்மை இருந்தால் சம்பந்தப்பட்ட செய்தியின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை. வேண்டும் என்றே உண்மைக்கு புறம்பாக வெளியான செய்தி குறித்து, சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியர் இடம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்பேன். நானும் பத்திரிகையாளர் குடும்பத்தை சேர்ந்தவள். எனது பெரியப்பா தமிழகத்தில் வெளிவரும் இரண்டு முன்னணி பத்திரிகைகளில் பணி மாற்றியவர், பின்னர் ஆங்கிலத்தில் வெளியான பத்திரிகையில் பணியாற்றினார். நானும் பத்திகையாளர் குடும்பத்தை சேர்ந்தவள் என்பதை பெருமையுடன், நாகர்கோவில் பிரஸ் கிளப்பின் உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்துக்கொள்கிறேன்.

குமரி மாவட்டத்தில் ஒரு ஆட்சியாளராக ஒரு குறிப்பிட்ட காலம் வரை பணி யாற்றுவோன் பின்னர் பணி மாற்றம் பெற்று சென்றாலும், இந்த மாவட்டத்தில் நான் பணியாற்றிய காலத்தில் இந்த மக்களின் பொதுப் பணியோடு, மக்களின் நியமன நேர்மையான கோரிக்கைகளை நிறைவேற்றினோம் என்ற வசந்தமான நினைவுகளை நெஞ்சில் சுமந்து செல்லவேண்டும் என்பதே எனது எண்ணம் என்று தெரிவித்தார்.

குமரி மாவட்டத்தில் மூத்த பத்திரிக்கையாளர் தாகூருக்கு தீபாவளி தின வாழ்த்துக்களுடன் பட்டாஸ், இனிப்புகள், மளிகை சாதனங்களை ஆட்சியர் கொடுத்ததுடன், நாகர்கோவில் பிரஸ் கிளப் உறுப்பினர்கள் 121 _ பேருக்கும் ஆட்சியர் தீபாவளி பொருட்கள் அடங்கிய “கிட்டை” கொடுத்தார். இதே நிகழ்வில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பங்கேற்று பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்ததுடன், மரணம் அடைந்த பத்திரிகையாளர்கள் மூவரின் குடும்பத்திற்கு மேயரின் தனிப்பட்ட முறையில் நிதி உதவி செய்தார். நாகர்கோவில் பிரஸ் கிளப்பின் தீபாவளி பரிசு பொருட்கள் வாங்குவதற்கான உதவியை கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வரும்.

வடக்கன் குளம் ஜாய் பல்கலைக்கழகத்தின் வேந்தர். எஸ்.எ.ஆர். ஜாய் ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம், ராஜேஷ்குமார், கன்னியாகுமரி தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்களான சந்திரன், ராஜ், கென்னடி ஆகியோருக்கு செயலாளர் மணிகண்டன் நன்றி தெரிவித்தார்.

நிகழ்வில் மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத் பிரைட், உதவி அதிகாரி சுஸ்மா, பிரஸ் கிளப் தலைவர் மதன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் விழாவில் உரையாற்றினார்கள்.










