தமிழ்த்திரையுலகின் ‘சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த்தின் 72வது பிறந்தநாள் இன்று. பெங்களூருவில் நடத்துநராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம்.

பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். #hbdsuperstarRajinikanth என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

அவரின் பிறந்தநாளுக்கு சிறப்பு மோஷன் போஸ்டர் எல்லாம் வெளியிட்டு அசத்தியிருக்கிறார்கள்.